அறிவார்ந்த தேவேந்திரகுல வேளாளர் இனமான சொந்தங்களே !
2024 ஆம் ஆண்டு நடை பெற உள்ள பாராளுமன்ற தேர்தல் என்பது, நமது இனம் அரசியல் படுத்துவதின் எழுச்சித் தேர்தல் ஆகும்.
இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, நமது இனத்தின் ஓட்டுக்களை இலவசமாக பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி,தி மு க,அதிமுக,கம்யூனிஸ்ட்கள் என்று எந்த கட்சியும் நமது இனத்திற்கு அணு அளவுகூட நன்மை செய்தது இல்லை என்பதை நாம் அறிந்ததேயாகும்.
60 ஆண்டுகளுக்குமேல் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியி அதிகாரத்தில் இருந்த காலங்களில், தேவேந்திரகுல வேளாளர்களின் தேச விடுதலை வீர வரலாற்றையோ,தியாகத்தையோ,நமது பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவற்றில் நாம் கொண்ட சிறப்புகளை மதித்து அதற்கான அங்கீகாரம் கொடுக்காது ஏமாற்றியதோடு இக்கட்சிகள் நம்மை தீண்டத் தாகாத இனமாக நடத்தியதோடு,நம்மவர்களுக்கு பிச்சை போடும் முதலாளிகளாகவே நடந்து கொண்டனர்.
பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட பள்ளிகளை வன்னியர் என்றும்,
பறையர், சாம்பவான்,கோழிப் பறையர்,புல்லுவ பறையர் என பல்வேறு உட்ப் பிரிவுகளாக இருந்தவர்களை ஆதிதிராவிடர் என்றும் பகடை டொம்பன் காபுலர் சக்கிலியரை அருந்ததியர் என்றும், வலையர் காவக்காரர் என்ற உட் பிரிவுகளை ராஜ முத்திரையர் என்றும், இடையர் கோனார் யாதவர் என்றும், ஆசாரி கம்மாளர் தச்சர் கொல்லர் ஆகிய உட்பிரிவுகளை படைப்பாற்றல் கொண்ட வடநாட்டு கடவுள் பெயரிலும்,தஞ்சாவூர் கள்ளர்களை பிற்படுத்தப் பட்டோராகவும்,பாண்டிய நாட்டு கள்ளர்களை மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாகவும், குற்றப்பரம்பரைகளை சீர்மரபினர் தேவர் என்றும், கொங்கு வேளாளர்களை கொங்கு வேளாளக் கவுண்டர்கள் என்றும், குயவர்களை பார்கவா என்றும் மீனவர் செம்படவர்களை பெஸ்தவா என்றும்,சினன்மேளம் மோளக்காரர் தாசியர் போன்பெயர்களில் இருந்தவர்கள் இசை வேளாளர்கள் என்றும்,உயர் சாதிகளாக பெயர் மாற்றம் செய்வித்த கட்சிகள் தான் இன்று இந்தியா கூட்டணி என்ற தலைப்பில் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் வழக்கிலிருந்த சண்டாளன்,முடுச்சவிக்கி,மொள்ளமாரி,கோப்பமாரி போன்ற குற்றப் பரம்பரை சாதிகள் தற்போது வேறு வேறு பெயர்களில் தங்களை உயர்ந்தவர்களாக அடையாளப் படுத்திக் கொண்டனர்.இதில் பிற மொழிக்கார சாதிகளை தமிழ் சாதிப் பட்டியல்களில் நூழைத்த கொடுமைகளை செய்து சமூக நீதி என்ற பெயரில் எமது தமிழர்களை முட்டாளாக்கி, ஆட்சி அதிகாரங்களில் கோலோட்சி வருகின்றனர்.
இத்தகைய சாதிகள் அனைத்தும் நம்மை இழிவாக பார்க்க வைத்த கயவர்கள் தான் தமிழகத்தில் தி மு க தலைமையில் இந்தியா கூட்டணியாக உருவெடுத்துள்ளதை எமது இனம் கட்டாயமாக உணரவேண்டிய தருணம் இப் பாராளு மன்ற தேர்தலாகும்.
மேற்காண் சாதிகளின் பெயர்களை மாறிய காலங்களில்,தமிழக ஆட்சி அதிகாரத்திலிருந்த, மாநில அரசுகளுக்கு எந்த தயக்கம் சங்கடமும் இல்லாமல் சமூக நீதி என்ற கொள்கை பேசி சட்டசபையில் சட்டம் நிறைவேற்றியது.
நமது இனமக்கள் மிகப் பெரும் மக்கள் தொகை கொண்டவர்கள் உழவர் குடி மக்கள் போர் மரபு கொண்டவர்கள் மாநிலம் முழுமையும் பரந்து விரிந்து பல உட்பிரிவுகளில் வாழ்கின்றனர் என்பதை ஆதரப்பூர்வமாகவும் வரலாறுப் பூர்வமாகவும் நமது அறிஞர் பெருமக்கள் பல் வேறு வழிகளில் ஐம்பதாண்டுகளுக்கு மேலாக மத்திய மாநில அரசுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்தும், செவி சாய்காத சதிகார இந்தியா கூட்டணி கட்சிகள், பாரதீய ஜனதாகட்சி பாராளுமன்றத்தில் நமது வரலாற்றையும், பண்பாட்டையும் 13 வட நாட்டு உறுப்பினர்களைக் கொண்டு பேச வைத்ததோடு, நம்மை இனிமேல் நமது பண்பாட்டுப் பெயரால் தேவேந்திகுல வேளாளர் என்று அழைக்க வேண்டும் என்று சட்டமும் இயற்றி நம்மை அகில இந்திய அளவில் பெருமைப் படுத்தியது.
தமிழர் என்று பேசினாலே நமது மக்கள் நன்றி மிகுந்தவர்கள் நம்மை அங்கீகரித்த அரசியல் கட்சியை எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டார்கள் என்பதை உணர்ந்த திராவடியா கட்சியாகிய தி மு க மூன்று கோடியில் மணிமண்டபம்,குதிரை மேல் அமர்ந்த நிலையில் வெண்கல சிலை என்று பிச்சை போட்டு கூத்தாடிப் பார்கிறது.
தமிழர் என்று பேசி ஏமாற்றிய கருணாநிதி அரசியலுக்கு எமது மக்கள் முடிவு கட்டி விட்டனர்.
தேவேந்திரகுல வேளாளர் அரசியலுக்கே இனி முன்னுரிமை என்ற கொள்கைக்கு வந்துவிட்டனர்.
எம்மவரின் பட்டியல் வெளியேற்றம் என்ற கோரிக்கையையும் மதிக்கின்ற கட்சி பாரதீய ஜனதாகட்சி மட்மே ஆகும்.
எங்களின் உணர்வுகளையும் எதிர்பார்புகளையும் மதித்து மக்கள் மன்றத்தில் எங்களை அங்கீகரித்த பாரதீய ஜனதா கட்சிக்கே எமது மக்கள் வாக்களிப்பது அரசியலில் அறிவுடமையாகும்.
எமது இனத்தை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தி மு க கூட்டணியில் இருந்த போதும் எமது இனத்திற்கு எந்த பயனும் இது நாள் வரையிலும் இல்லை,இனி மேலும் இருக்க வாய்பில்லை !
எமது இனத்தவர்களுக்கு வேட்பாளராக பா ஜ க வில் நிற்க வாய்புக் கொடுக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பே இல்லாமல் நிபந்தனை அற்ற ஆதரவினை தேவேந்திர மடாலயம் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவையும் தேர்தல் களப் பணியும் செய்யும் என்று உறுதி கூறுகிறது.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்