கோவை சாய்பாபாகாலனி கருணாநிதி நகர் பகுதியில் நடைபெற்ற இலவச கண் மற்றும் பல் சிகிச்சை முகாமை 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி துவக்கி வைத்தார்..
கோவை மாநகரட்சி 45 வார்டு சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள கருணாநிதி நகரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், கோவை மத்திய மண்டலம் ,வாசன் கண் மருத்துவமனை மற்றும் தேவி ஆப்டிகல்ஸ் ஆகியோர் இணைந்து இலவச கண் மற்றும் பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது..முன்னதாக இந்த முகாமை, 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பேபி சுதா ரவி,பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஜே முகமது ரஃபி ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்..துவக்க நிகழ்ச்சியில்,பல்சமய நல்லுறவு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் A. அபுதாகிர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராகிம் மனிதநேய மக்கள் கட்சி தலைமை செயலக பிரதிநிதி அனல் அக்பர் திமுக நிர்வாகி பத்மநாபன் பல் சமய நல்லுறவு இயக்க தகவல் மற்றும் அணி செயலாளர் அபுதாஹீர் கோவை தல்ஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முகாமில்,அனைவருக்கும் கண் பரிசோதனை,தரமான கண் கண்ணாடிகளை குறைந்த விலையில்,வழங்குவது,இரத்த மாதிரி கண்டறிதல்,மற்றும் பல் மருத்துவ முகாம் போன்றவை நடைபெற்றன.இதனை தொடர்ந்து அதே பகுதியில் உள்ள வ.ஊ.சி.வீதியில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமிற்கு சென்ற கவுன்சிலர் பேபி சுதா,அங்கு உள்ள பெண்களிடம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதன் அவசியம் குறித்து கூறினார்.