*உலக முருக பக்தர்கள் மாநாடு அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி!*
உலக முருக பக்தர்கள் மாநாடு அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார். உலக முத்தமிழ் முருகப் பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி உலக முத்தமிழ் முருகப்பக்தர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு இம்மாநாடு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பழனியில்
2 நாட்கள் நடைபெறும் என்றும் இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களை நிர்மாணித்துள்ள அறங்காவலர்கள் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் அழைக்கப்படுவார்கள் என்றும்,
இந்த மாநாட்டில் முருகனை பற்றிய ஆய்வுகள், முருகனின் புகழ் பரப்பும் கருத்தரங்கங்கள், சொற்பொழிவுகள், இடம்பெறும் என்றும்
மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் ரூ.98 கோடி மதிப்பீட்டில் அழகு தமிழால் நடத்தப்பட்டது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் அறநிலையத்துறை நிதி ரூ.100 கோடி மற்றும் தனியார் பங்களிப்பு ரூ.200 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடக்கிறது.இதே போல் முருக பெருமானின் திருத்தணி, திருப்பரங்குன்றம் கோவில்களிலும் திருப்பணிகள் நடக்கிறது.மேலும் 26 ராமர் கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடவுளை தரிசிக்க கோயில்களுக்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கோவில்கள் தூய் மையாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்படுகிறது என்னும் செயல் மிகவும் வரவேற்கதக்கதாகும்.மேலும் தற்போது கோடையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுவதும் முதல்வர் ஸ்டாலினை மகிழ்ந்து போற்றக்கூடியதாக அமைந்துள்ளது என்றும் உலக முருக மாநாடு அறிவிப்பு பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்துவதால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.