தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அச்சக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ், போஸ்டர், பேனர் அச்சடிப்பது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்
36, தூத்துக்குடி பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024 தொடர்பாக அச்சக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ், போஸ்டர், பேனர் அச்சடிப்பது குறித்து தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கோ. லட்சுமிபதி, தலைமையில் நடைபெற்றது.
இன்று (17.03.2024) 36, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்,போஸ்டர், பேனர் அச்சடிப்பது தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
1) மக்கள் பிரநிதித்துவ சட்டம், 1951 பிரிவு 127 ஏன் கீழ் அச்சு ஊடகங்களில் விளம்பரம் செய்தல் கவரப்படுகிறது. இந்த விதிகளில் தவறு செய்தால் அச்சக உரிமை ரத்து செய்யப்படுவதோடு, இதனுடன் தொடர்பான மாநில சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்.
2) ஒவ்வொரு அச்சகமும் தாங்கள் பிரிண்ட் செய்வதற்கு அடியில், அச்சக பெயர் மற்றும் முகவரி தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் வேறு ஏதும் அச்சடித்திருந்தால் குறிப்பிடப்பட வேண்டும்.
3) மேலும், அச்சடிக்கப்பட்ட நகல், மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதிமொழியினை மக்கள் பிரநிதித்துவ சட்டம் பிரிவு 127ஏ(2) ன் கீழ் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும். மாநில தலைநகரில் அச்சடித்திருப்பின், மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு பிரிண்ட செய்த 3 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
4) மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் பிரசுரம், போஸ்டர் தொடர்பான விபரங்கள்
பிரிண்டிங் பிரஸிடமிருந்து வரப்பெற்றவுடன் அச்சடித்தவர் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்டவர்கள் சட்ட விதிகளின் படி கடை பிடிக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்து, அதன் ஒருநகயினை தனது விளம்பர பலகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.
5) மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127 ஏன் கீழ் விதி மீறல் இருப்பின் தகுதி வாய்ந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடரவேண்டும்.
6) பிரிண்ட் செய்த பொருள்கள் மற்றும் அதற்கான செலவுக் தொகை ஆகியவைகள் கணக்கு குழவிற்கு மறைமுக கர்காணிப்பு பதிவேடு(Shadow observation register) தயார் செய்வதற்கு கொடுக்கப்பட வேண்டும்.
7) ஓய்வொரு அச்சகம் அல்லது பிரசுரகமும், தங்களது பெயர் மற்றும் முகவரி, பிரிண்ட் செய்த எண்ணிக்கை, அதற்கான செலவுத் தொகை போன்ற விபரங்களை, ஊடகங்களில் விளம்பரம் உட்பட மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
மேலும், நாடாளுமன்ற பொது தேர்தல் 36, தூத்துக்குடி தொகுதியில் நல்ல முறையில் நடைபெற ஒத்துழைப்பு நல்கிட நோட்டீாப், போஸ்டர், பேனர் அச்சடிப்பது தொடர்பாக அனைத்து அச்சக உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் கோரப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர், ச.அஜய்சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பராஜகுரு, தேர்தல் வட்டாட்சியர் தி.தில்லைபாண்டி மற்றும் நோட்டீஸ், போஸ்டர், பேனர் அச்சடிப்பது தொடர்பாக அனைத்து அச்சக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.