ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் ,நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட் பட்ட,பவானிசாகர்சட்டமன்றத்தொகுதி திமுக சார்பில்,வாக்கு சாவடி பாக முக வர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோச னைக்கூட்டம் தனியார் திருமண மண் டபத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம்,முன்னாள்சட்டமன்றஉறுப் பினர் எல்.பி.தர்மலிங்கம், பவானி சாகர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் அமுதரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி. தலைமை தாங்கி,பேசுகையில், நான், இந்த கூட்டத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளராக வந்திருக்கி றேன்.வேட்பாளராக,வரவில்லை.வேட்பாளர் யார் என்பது திமுக தலைவர் மற்றும் நிர்வாகிகள் தான் முடிவு செய்து, அறிவிப்பார்கள் என்றும், தமிழக முதல்வராக, தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது, முந் தைய அதிமுக அரசு,கஜானாவை காலி செய்து விட்டு, தமிழகத்தை கடனாளியாக, விட்டுச்சென்ற நிலை யில் , கொரோனா கால பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க, குடும்பத்தி ற்கு 4 ஆயிரம் வழங்கியும், வெளிநாடு களில் இருந்து முதலீட்டை பெற்று தந் தும், கொரோனா காலத்தில்,உயிரை துச்சமென நினைத்து,நோயாளிகளை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து,ஆறுதல் கூறி, உதவிக்கரம் நீட்டிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
தமிழகத்தின் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை கண்டு பா.ஜ.க.வினர் பயப்படுகிறார்கள்கள் ஏன்? என்றால், மம்தாவும், பட்நாயக்கும் பிஜேபி-யை பார்த்து பயப்படும் நிலையில, வரு மான வரித்துறை, அமலாக்கத்துறை என எந்த துறை வந்தாலும்பயப்படாத ஒரே இயக்கம் திமுக. மற்றும் நமது தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த தேர்தலில் நீங்கள், தேர்தல் பணியாற்றி, பாசிசத்தை வீழ்த்தி,இந்தியாவைகாக்க,பாடுபடும் தலைவர்மு.க.ஸ்டாலின்தலைமையில்திமுக வெற்றிபெறவாக்களிக்கவேண் டும் என்று கூறினார். இந்தக் கூட்டத் தில், திமுக மாவட்ட துணைச் செயலா ளர் கீதா நடராஜன், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் கே. சி.பி. இளங்கோ,பவானிசாகர் வடக்கு ஒன் றிய செயலாளர் மகேந்திரன்,தெற்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், புளியம்பட்டி திமுக நகர செயலாளர் பி.ஏ. சிதம்பரம், பேரூர் கழக செயலா ளர்கள், கே .என். பாளையம் கே.ரவிச் சந்திரன்,அரிப்பம்பாளை.யம் பேரூர் திமுக செயலாளர் வக்கீல் செந்தில் நாதன், பவானிசாகர் பேரூர் திமுக செயலாளர் டி.ஏ.மோகன்,மற்றும்
பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகி கள், இளைஞர் அணியினர், கவுன் சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திமுக சத்தி வடக்கு ஒன் றிய செயலாளர் ஐ.ஏ.தேவராஜ், வர வேற்புரை நிகழ்த்தினார். நிறைவாக, சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவ ரும்,திமுக சத்தி நகரச் செயலாளரு மான, ஆர். ஜானகி ராமசாமி நன்றி கூறினார்.