சூலூர் ஆர்.வி.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் மொழித்துறை சார்பாக வல்லினர் வாசகர் வட்டம் என்னும் தொடர் நிகழ்வின் நிறைவு விழா
15.03 2024 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் மொழித்துறை பேராசிரியை முனைவர் வா.சித்ரா வரவேற்புரை நல்கினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுரேந்திரன் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி அறிமுகவுரையாற்றினார். எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு சங்கத்தின் உறுப்பினருமான கரீம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாசல் திறக்கும் வாசித்தல என்னும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் மொழி என்பது ஓவியங்களில் இருந்து பிறந்தது என்றும், மொழி தொடர்ச்சியாக பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்தது என்றும், இலக்கியங்கள் தோன்றுவதற்கு அடிப்படையாக மொழி அமைந்தது என்றும் பேசினார். மேலும் தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மாணவரிடம் எடுத்துக்காட்டி ஆசிரியரும் மாணவரும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்கிப் பேசினார். மேலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பெருமையாக பேசக்கூடிய திருக்குறள் ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்டு அது புத்தகமாக அச்சிடப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது என்று திருக்குறளின் பெருமையை மாணவரிடம் எடுத்துரைத்தார். மேலும் வாழ்க்கை என்பது தேடல். அந்த தேடல் அறிவின் வாயிலாக வந்தால் அது சிறப்படையும். அந்த்த் தேடலுக்கான இடம் நூலகம் என்று மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் தாங்கள் படித்த நூல்களை அறிமுகப்படுத்திப் பேசினர். விழாவின் முடிவில் முனைவர் ப. சின்னசாமி நன்றியுரையாற்றினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.