கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே 24-ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த முதலிபாளையம் காட்டம்பட்டி சாலையில் ஏழை எளியோருக்கு மருத்துவசேவை வழங்கும் பேரூரடிகளார் மருத்துவமனை துவங்கப்பட்டது..
24 ஆம் குருமகா சன்னிதானம் மறைந்த பேரூர் ஆதின ,மறைந்த பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அவதரித்த கணேசபுரம்,முதலிபாளையம் பகுதியில்,கிராம மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் விதமாக புதிய பேரூரடிகளார் மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு துவங்கப்பட்டது..
இதற்கான துவக்க விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள்,மற்றும் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி,என்.ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மனோகரன்,எல்.சி. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வித்யாராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். காட்டம்பட்டி முதன்மைச் சாலையில் துவங்கப்பட்டுள்ள இம்மருத்துவமனையில் முதல் கட்டமாக புறநோயாளிகள் பிரிவு,துவங்கப்பட்டுள்ளதாகவும், கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதமாக,தற்போது பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், எலும்பு மூட்டுச் சிகிச்சை ஆகிய சிறப்புப் பிரிவுகள் முழுமையாக 24 மணி நேரமும் இயங்கும்.என சாந்தலிங்க மருதாசல அடிகளார் தெரிவித்தார்..திறப்பு விழாவை முன்னிட்டு முதல் பத்து நாட்கள் இலவச பரிசோதனைகள் செய்ய உள்ளதாக கூறிய அவர்,மருத்துவமனை மருந்தகத்தில் மருந்துகளுக்கு பத்து சதவீத சலுகை வழங்குவதாக தெரிவித்தார்..மேலும் இங்கு, பெண்கள் மகப்பேறு மருத்துவத்தில் கிராம பெண்கள் பயனடையும் வகையில் துவங்கி உள்ளதாகவும்,தேவைப்பட்டால் அறக்கட்டளை வாயிலாக இலவச சிகிச்சை உதவிகளும் வழங்க உள்ளதாக அவர் கூறினார்..