பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சனம்

கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறும் அண்ணாமலை டார்ஜிலிங்க்,காஷ்மீர்,ஊட்டி போன்ற குளிர்பிரதேசத்தில் சென்று தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாம் என பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி விமர்சனம்..

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க.மாநில தலைவர்  அண்ணாமலை  அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய போது  குளுமையாக இருந்த கோவையில் வெப்பம் அதிகரிக்க திராவிட அரசுகளே காரணம் என பேசியிருந்தார்.இந்நிலையில் ஒரு கட்சியால் நகரத்தின் வெப்பத்தை அதிகரிக்க முடியுமா என அண்ணாமலையின்  பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் முகம்மது ரபி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர்,பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தோல்வி பயத்தில் ஏதேதோ உளறி வருவதாக கூறிய அவர்,கோவையில் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறும் அண்ணாமலை டார்ஜிலிங்,காஷ்மீர்,ஊட்டி போன்ற குளுமை பிரதேசத்தில் சென்று தேர்தலில் போட்டியிடலாம் என நகைச்சுவையாக விமர்சித்தார்.கோவையை பொறுத்த வரை இந்தியா கூட்டணியின் தி.மு.க.வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதாக கூறிய அவர்,மக்கள் மாற்றத்தை விரும்ப துவங்கி உள்ளதாகவும்,எனவே வருமர நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார்...இந்த சந்திப்பின் போது பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் ஹஜ்ரத் அப்துல் ரகுமான்,அபுதாகீர்,கே.யே.அபுதாகீர் ஆகியோர் உடனிருந்தனர்..
Previous Post Next Post