ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, சத் தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே நேற்று இரவு குட்டி யுடன் வந்த தாய் யானை, திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது. தாய் யானையை சுற்றி சுற்றி, குட்டியானை அங்கேயே சப்தமிட்டு வந்ததால், அங்கிருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்க லம் வனத்துறையினர் மற்றும் கால் நடை மருத்துவர் சதாசிவம் உள்ளிட்ட குழுவினர், தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்துறையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானை எழ முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. அதனுடைய குட் டிக்கு இரண்டு மாதமே ஆனதால், அங்கேயே சுற்றித் திரிந்தது.
பண்ணாரி - பவானிசாகர் சாலையின் அருகிலேயே,யானை படுத்திருப்ப தால் குட்டியானை சாலைக்கு சென்று அடிபட்டு விட்டால் , என்ன செய்வது என்று, ஒரு ஐந்து அடி ஆழத்தில் குழியை தோண்டி, அந்த குட்டியை அந்த குழிக்குள் வைத்து, அதற்கு பால் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் ஆகியவற்றை வனத் துறையினர் வழங்கி வருகிறார்கள்.தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் இரண்டு மாத குட்டி யானையின் பாச போராட் டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின் றனர். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரண்டு யானைகள், இந்த யானையை சுற்றி சத்தமிட்டு வருவ தால், வனத்துறையினர் பட்டாசுகள் வெடித்து யானைகளை துரத்தி வருகின்றனர்.