நாடக நடிகர்கள் சங்க பொதுக்குழு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் சிறப்புரை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

*நாடக நடிகர்கள் சங்க பொதுக்குழு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் சிறப்புரை!    முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்!*                        மயிலாடுதுறையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் கட்டிடத்தில் நாகை மாவட்ட தமிழிசை நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை விழாவும்,14வது பொதுக்குழு கூட்டமும் மாவட்ட செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ராஜகோபால், கௌரவ தலைவர் புண்ணியமூர்த்தி. மணிவேல், தனபால்,மணி உள்ளவர்கள் முன்னிலை வகித்தார்கள். விழாவில்  மயிலாடுதுறை முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். விழாவில் கலைத்தாய் அறக்கட்டளை நிறுவனர் கிங் பைசல், சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம்,ஜோதி, மகாலிங்கம், திருஞானம், ராமு, ஜெயராமன், கோவில்பத்து செல்வராஜ், பரசுராமன், பாலையா, ரவி, சோமசுந்தரம் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். சிறந்த கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும்  முதிர்ந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் பெற்று தருதல், நாட்டுப்புற நாடக நடிகர்கள், கலைஞர்களுக்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில்  வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Previous Post Next Post