இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.!


 இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம் தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.!

2024 மக்களவத் தேர்தலை முன்னிட்டு 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரத்தை தமிழ்நாடு முழுவதும் திமுக தொடங்குகியது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் அமைச்சர் கீதா ஜீவன் 'இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்' பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார்.!
2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் அக்கட்சித் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில் 2 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2024 - 2025 ஆம் ஆண்டுகான பட்ஜெட்டில் அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு முதல் தீர்மானத்தில் நன்றியுடன் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 இதனையடுத்து திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், பிப்ரவரி 26-ஆம் தேதியன்று 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தைத் தொடங்குவது என மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2 வது வது தீர்மானத்தில் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் 'இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரையை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பிப்ரவரி 24 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 25 ஆகிய தேதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதிப் பார்வையாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலம் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை தனித்தனியாக நடத்தி, மக்களை அணுகுவது குறித்து ஆலோசிப்பது பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதனை அடுத்து இன்று தூத்துக்குடி 30 ஆவது வார்டுக்குட்பட்ட  டூவிபுரம் பகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சாரத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளும், 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்களையும் குறிப்பிட்டு அச்சிடப்பட்ட பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியதுடன் மக்கள் விரோத பா.ஜ.க., ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், மாநில உரிமைகள் மீட்கவும், அநீதிகளை எடுத்துரைத்தும் மக்களிடம் பேசினார். 

இதில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்த சேகரன், .அண்ணா நகர் பகுதி செயலாளர் ரவீந்திரன், 30 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் R. அதிர்ஷ்டமணி, வட்டச் செயலாளர் P.செந்தில்குமார், மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் N.அன்பழகன், வட்டப் பிரதிநிதி கார்த்திக் கோயல், வட்ட துணை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் வட்ட செயலாளர் கிளிப்ராசன், Ex MC அந்தோணிராஜ், உறுப்பினர்கள் சீனிவாசன், ரவிக்குமார், அழகுவேல், ராஜ் மோகன், ஷேக் உமர், முத்துக்குமார், கார்த்திக், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post