தூத்துக்குடியில்உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.86,000 பணம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை .!


 தூத்துக்குடியில்உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.86,000 பணம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை .!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனை ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் இன்று மாலை 6 மணி அளவில் பறக்கும் படையினர் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு பொட்டல்காடு விளக்கு ரோட்டில் வாகன சோதனையில் தூத்துக்குடியில் இருந்து கோவக்காடு சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

அப்போது எந்தவித ஆவணங்களும் இல்லாமல் இருந்த ரூ.86 ஆயிரத்து 750 ஐ பணத்தை பறிமுதல் செய்தனர். காரில் வந்தவர் அந்த பணம் உப்பளத்தில்பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக கொண்டு செல்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Previous Post Next Post