"ஏழ்மையான குடும்பம் லேப்டாப் வாங்க உதவுங்கள்" : அமைச்சரிடம் கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி -சட்டென ₹75,000 பணத்தை கொடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.!
திருச்செந்தூர்: அடைக்கலாபுரம் பகுதிக்கு வருகை தந்த மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து, நாங்கள் ஏழ்மையான குடும்பம் என்பதால் படிப்புக்குத் தேவையான லேப்டாப் வாங்க முடியவில்லை என கோரிக்கை மனு அளித்துள்ளார் கல்லூரி மாணவி ஆஷா.
சட்டென உதவியாளரிடம் பணத்தை எடுத்து வரச் சொல்லி, மாணவியின் கையில் ₹75,000 பணத்தை கொடுத்தார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.