நாடாளுமன்றத் தேர்தல் 2024,நாடு முழுவதும், ஏழு கட்டமாக நடைபெறும் எனவும்,தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து,தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலு க்கு வந்தன.தமிழக தேர்தல் தேதி அறிவித்ததைதொடர்ந்து,மாவட்டதேர் தல் அலுவலரும் ஈரோடு மாவட்ட ஆட் சித் தலைவருமான ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப உத்தரவின் பேரில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட,பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலராக உமா சங்கர் பொறுப்பேற்றார்.
உதவி தேர்தல் அலுவலர் உமாசங்கர் தலைமையில்,மூன்று தேர்தல் பறக் கும் படையினரும், 3 நிலையான கண் காணிப்பு குழுவினரும்,1 வீடியோ கண்காணிப்பு குழுவும், ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களி ல், குழு பொறுப்பு அலுவலர்கள், காவல்துறையினர், வீடியோ கேமரா ஆப்ரேட்டர்உள்ளடக்கிய 7 குழுவினர் இன்று பவானிசாகர் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதிகளில் ,கண்காணி ப்பு பணியை துவக்கினர்.
முன்னதாக சத்தி வட்டாச்சியர் அலு வலகத்தில் இருந்து,உதவி தேர்தல் அலுவலர் உமாசங்கர் மற்றும் வட்டா ச்சியர்கள் மாரிமுத்து, வெங்கடேஸ் வரன், ஜெகநாதன், மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மணி வண்ணன், சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் செல்வராஜ்,நில வருவாய் ஆய்வாளர் ஜீவன் ஆகியோர் முன் னிலையில் , கண்காணிப்பு குழுவி னர் வாகன தணிக்கை மற்றும் கண் காணிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் குறித்த பணிகளை மேற்கொள்ள, வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.