சென்னை வண்டலூரில் நாட்டு வெடிக்குண்டுவீசி, திமுக பிரமுகர் வெட்டி கொலை - சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் - 4 பேருக்கு நீதி மன்ற காவல் - கோபி சிறையில் அடைப்பு.



ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்,   சென்னையில், நாட்டு வெடிகுண்டு வீசி, திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்த வழக்கில், தொடர்புடைய குற்ற வாளிகள் 5பேர் சரணடைந்த சம்பவம், சத்தியமங்கலத்தில், பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

சென்னை வண்டலூர் வேம்புலி அம் மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வி.எஸ்.ஆராமுதன் (56),இவர் காட்டா ங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், ஒன்றிய துணை சேர்மனாகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில்,வண்டலூர் மேம்பாலம் அருகில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் செய்தி ருந்த நிலையில், அதை பார்வையிடு வதற்காக, நேற்று முன் தினம் தனது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, இவரைநோட்டமிட்டு,தொட ர்ந்துகாரில்வந்த,மர்ம கும்பல் இவரது கார கண்ணாடியின் முன்புறம் நாட்டு வெடிகுண்டுகளை சரமாரியாக வீசி உள்ளது. இதில் கண்ணாடியை துளை த்துக் கொண்டு வெடிகுண்டு காருக் குள் விழுந்து வெடித்து, கார் தீப் பிடி த்த நிலையில்,ஆராமுதன் காரில் இரு ந்து இறங்கி தப்பி ஓட முயன்றார். 

அப்போது அவரை சுற்றி வளைத்த மர்ம கும்பல்,அவரின் கை,தலை, உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டிவிட்டு, வாகனங்களில் ஏறி தப்பிச் சென்றது. பஸ் நிறுத்தம் அரு கே இந்த சம்பவம் நடந்ததால், அங்கும் நின்று கொண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் சிதறி ஓடினர்.மின்னல் வேகத்தில்,ரவுடி கும்பல், வெறித்தன மாக,திமுக பிரமுகரை தாக்கி விட்டு தப்பிச் சென்றது. இது குறித்து, தக வல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இரு ந்த, ஆராமுதனை மீட்டு, 108 ஆம்புல ன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆராமு தனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்த னர். 



இது குறித்த புகாரின் பேரில், ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்க ளில் பதிவான காட்சிகளை வைத்து, தப்பி ஓடிய ரவுடி கும்பலை 4  தனிப் படை அமைத்து வலை வீசி தேடி வந் தனர். இந்தநிலையில்,வெள்ளியன்று காலை,சத்தியமங்கலம் குற்ற வியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாதேவி முன்னிலையில் செங்கல்பட்டு,வண்ட லூர்,டி.எஸ்.நகர்ஓட்டேரி பிரிவு,ரகு என் பவரின் மகன் முனிஸ்வரன்(22)காஞ் சிபுரம்செங்கல்பட்டு,மண்ணிவாக்கம், கலைஞர் கருணாநிதி நகர் பாஸ்கர் என்பவரின் மகன் சத்திய சீலன் (20) திருப்பூர் மாவட்டம், அவிநாசி ராக்கி யாபாளையம் காந்திஜிவீதியை சேர் ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன்
சம்பத்குமார் (20), அவிநாசி ராக்கியா
பாளையம் கணியாம்பூண்டி வீதி, சுப்பிரமணி என்பவரின் மகன் மணி கண்டன் மற்றும் இளஞ் சிறார் உள்ளி ட்ட 5 பேர் சரணடைந்தனர்.

 நடுவர் நீதிமன்ற நீதிபதிஉமாதேவி, சரண் அடை ந்த 5 பேரிடம்,விசாரணை மேற்க் கொண்டு,சிறார்நீீங்கலாக, மற் ற 4 பேரையும்,வரும் 6-ம்தேதிவரை கோபிசெட்டிபாளையம்,மாவட்ட சிறை யில்,நீதி மன்ற காவலில் அடைக்க உத்தர விட்டார். இளஞ்சிறாரை, செங் கல்பட் டில் உள்ள, இளைஞர் நீதி குழு மத்திடம் ஆஜர் படுத்த உத்தரவிட்டார். இதனை அடுத்து, போலீசார் நான்கு பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து ச் சென்று, பின்னர் கோபி மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்ற னர். இளம் சிறார் செங்கல்பட்டு மாவ ட்டத்திறக்கும் அழைத்துச் செல்லப்
பட்டார். வண்டலூரில் நடந்த திமுக பிரமுகர் கொலை வழக்கில், சம்பந்தப் பட்ட ஐந்து பேர், சத்திய மங்கலம் நீதி மன்றத்தில் சரணடைந்தது, சத்திய மங்கலம் வட்டாரத்தில் பெரும் பரபர ப்பை ஏற்படுத்தியது.





 

Previous Post Next Post