மகளிர் தினத்தை முன்னிட்டு, பெற்றோர் இல்லாத மாணவ மாணவியர் 15 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், கூடலூர் நகராட்சி ஆரம்ப பள்ளி மற்றும் திருமலைநாயக்கன்பாளையம் பள்ளியில், மகளிர் தினத்தை முன்னிட்டு உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில், இல்லம் தேடி சமூக ஆர்வலர் திருமதி.பேபி முருகேசன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் திருமதி.அரிட்டா புளோரி மற்றும் வானவில் மன்றக் கருத்தாளர் கருப்புசாமி ஆகியோர் இணைந்து பெற்றோர் இல்லாத மாணவ மாணவியர் 15 பேருக்கு உதவித் தொகை வழங்கினர்
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. மணிமேகலை அவர்கள் தலைமையேற்று நடத்தினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.