*நம்பியூரில் ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு காமிரா கட்டுப்பாட்டு அறையை கோபி டிஎஸ்பி தங்கவேல் திறந்து வைத்தார் நம்பியூர் போருராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் தலமை வகித்தார்*


 நம்பியூரில் ரூ.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு காமிரா கட்டுப்பாட்டு அறையை கோபி டிஎஸ்பி தங்கவேல் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியானது கோபி - கோவை சாலையில் அமைந்துள்ளது.இரவு - பகலாக இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.இதனால் விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்படுவதோடு, விபத்தை ஏற்படுத்தி விட்டு வாகனங்கள் தப்பி செல்வதும் வாடிக்கையாக உள்ளது. 

மேலும் கொலை, கொள்ளை சம்பவங்களில் குற்றவாளிகளை கைது செய்வதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது.இதனால் நம்பியூர் பேரூராட்சி எல்லை பகுதிகளில் கண்காணிப்பு சி.சி.டிவி கண்காணிப்பு கேமரா அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் நடவடிக்கை எடுத்தார்.அதைத்தொடர்ந்து ரூ15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொன்னமடை, புளியம்பட்டி சாலை, கோவை சாலை, கொளப்பலூர் சாலை சந்திப்பு, பேருந்து நிலையம், ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முதல் கட்டமாக 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த 6 மாதமாக நடைபெற்று வந்தது.

 இதற்கான கட்டுப்பாட்டு அறை நம்பியூர் காவலர் குடியிருப்பு கட்டிடத்தில் அமைக்கப்பட்டது.காமிரா பொருத்துதல், கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து நேற்று கண்காணிப்பு சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா முன்னிலை வகித்தார்.கோபி டிஎஸ்பி தங்கவேல் சிசிடிவி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். முன்னதாக ரவுண்டானாவில் அமைக்கப்பட்ட நம்ம நம்பியூர் என்ற பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் பேரூராட்சி தலைவர் கீதா முரளி, திமுக மாவட்ட சிறுபான்மை தலைவர் பா அல்லா பிச்சை கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் முருகசாமி,மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர் பி எஸ் பழனிச்சாமி மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் சண்முகசுந்தரம் நம்பியூர் பேரூர் திமு கழக செயலாளர் ஆனந்தகுமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வக்கீல் சென்னியப்பன்,நம்பியூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஜவஹர் பாபு,வட்டார தலைவர் ரத்தினசாமி ரத்தினசாமி சண்முகசுந்தரம் சதீஷ்குமார் மருதாச்சலம் மனோகரன், பேரூராட்சி துணைத் தலைவர் தீபா, பேரூராட்சி கவுன்சிலர்கள்,நாகேஸ்வரி, நந்தகுமார், செந்தில்குமார், ராதா மகாலிங்கம், பிஜேபி கந்தசாமி, வயக்காடு செந்தில்குமார், சுப்புலட்சுமி, வணிகர்கள் லிங்குராஜ் , குமுதா பள்ளி நிறுவனர் ஜனகரத்தினம், நம்பியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம், உட்பட துறை சார்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


நம்பியூரில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையை நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோபி டி.எஸ்.பி. தங்கவேல் திறந்து வைத்த போது எடுத்த படம்

Previous Post Next Post