சத்தி, கடம்பூரில், தேர்தல் பறக்கும் படையினரால், உரியஆவணங்கள் ஏதுமின்றி, கொண்டு வரப்பட்ட, 1,36,318 ரூபாய் பறிமுதல்.


 தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி,ஒரே கட்டமாக, பொது தேர்தல் நடைபெறுவதை யொட்டி,கடந்த சனிக் கிழமை முதல்,தேர்தல் நடத்தை விதி கள் உடனடியாக அமலுக்கு வந்தன. அதன் ஒரு பகுதியாக,நீலகிரிநாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட, 107. பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பகுதிகளில் 24 மணிநேரமும்,குழு பொறுப்பு அலுவலர்கள், காவல்துறை யினர்,வீடியோ கேமரா ஆப் ரேட்டர் உள்ளடக்கிய  குழுவினர்,தீவிர ரோந் து பணி மற்றும் வாக்காளர்களுக்கு, பரிசு பொருட்கள் மற்றும் பண பட்டு வாடா ஏதேனும் நடைபெறுகிறதா? என்பதையும் கண்காணித்து,தீவிர வாகன சோதனையில், ஈடுபட்டு வரு கின்றனர். 

இந்நிலையில்,நேற்று மாலை 5.45 மணியளவில், கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகில், பறக்கும் படை பொறு ப்பு அலுவலரும், நெடுஞ் சாலைத் துறை உதவி பொறியாளருமான, பாபு சரவணன் தலைமையிலான,பறக்கும் படையினர் வாகன சோதனையில், ஈடுபட்டிருந்த போது, தனியார் சிறு நிதி வங்கி,நுண் கடன் திட்ட பணி யாளர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில், உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ரூ,1,36,318 ரூபாயை கொண்டுவந்தது கண்டறியப்பட்டு, பறக்கும் படையினரால் தொகை பறிமுதல் செய்யப்பட்டது. நிதி நிறு வன ஊழியர்கள், மகளிர்க்கு, மைக் ரோ பைனான்ஸ் திட்டம் மூலம் கடன் அளித்த தொகையை, திரும்ப வசூல் செய்து வருவதாக தெரிவித்தனர். 

ஆனால் அதற்கு அவர்களிடம், முறை யான ஆவணங்கள் ஏதும் இல்லாத தால், பறக்கும் படையினர், பறிமுதல் செய்த பணத்தை,107 -பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, உதவி தேர்தல் அலுவலர் உமாசங்கர் மற்றும் கூடு தல் உதவி தேர்தல் அலுவலரும், சத்தி வட்டாச்சியருமான,மாரிமுத்து ஆகி யோரிடம் பணத்தை.ஒப்படத்தனர். 

தேர்தல் அலுவலர்கள் பணத்தை சரி பார்த்து, சத்தியமங்கலம் அரசு. சார் கருவூலத்தில் பணத்தை, ஒப்படைத்த னர்.சம்பந்தப்பட்ட,நுண் கடன் திட்ட பணியாளர்களிடம்,,தேர்தல் முடிந்த பின் உரிய ஆவணங்களை சமர்பித்து, பணத்தை திரும்ப பெற்று கொள்ள லாம் என,தேர்தல் அதிகாரிகள் தெரி வித்தனர்.

Previous Post Next Post