100% வாக்களிப்புக்கு உதவுவோம் வாரீர் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்

100% வாக்களிப்புக்கு உதவுவோம் வாரீர் சமூகஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் 
2024 பாராளுமன்றத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் பெரும்பாலும் சுமார் 70 சதவிகித வாக்கு பதிவு மட்டுமே நடைபெற்றுள்ளதால் கிட்டத்தட்ட 30% மக்களின் எண்ணத்தை அறிய முடியாமல் உண்மையான மக்கள் பிரதிநிதியை‌ தேர்ந்தெடுக்க முடியாத நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த வகையில் உண்மையான ஜனநாயகத்தை நாம் பெற்றுள்ளோமா என்றால் அதுவும் கேள்விக்குறியேயாகும். ஆகவே உண்மையான ஜனநாயகம் நிலைநாட்டப்பட நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று நாம் வாழ்கின்ற பகுதியில் உள்ள அனைவரும் வாக்களிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இது அரசு அதிகாரிகளால் மட்டுமே ஏற்படுத்த முடியாத ஒன்று என்பதையும் உணர வேண்டும். நாடும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என்னும் ஆசை அனைவரும் மனதிலும் இருக்கின்ற பொழுது 100% வாக்குப்பதிவையும் உருவாக்கும் பணியையும் கடமையையும் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதிகளிலும் கிராமத்திலும் ஊர்களிலும் உள்ள சுய உதவிக் குழுக்கள் முதல் சங்கங்கள், இயக்கங்கள், பல்வேறு அமைப்புகள் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வாக்கு சதவீதத்தை 100% என்னும் நிலையை உருவாக்கும் புனிதமான நிலையை உருவாக்கிட அனைவரும் சபதமேற்க வேண்டும். அதற்காக திட்டமிட்டு பணியாற்றி உண்மையான ஜனநாயகம் உருவாக்குவோம். வாரீர்! வாரீர்!! என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Previous Post Next Post