தூத்துக்குடி : பைக் திருடிய வாலிபர் கைது: ரூ.1 லட்சம் மதிப்புள்ள பைக் மீட்பு!
தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள மோட்டார் பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவைச் சேர்ந்தவர் பஷீர் மைதீன் மகன் முகம்மது ரியாஸ் (22). கடந்த 26ம் தேதி வீட்டின் முன்னால் நிறுத்தியிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள அவரது பல்சர் பைக் திருடு போய்விட்டது. இது தொடர்பாக அவர் மத்தியபாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் சப் இன்ஸ் வாசுதேவன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி, முத்தையாபுரம், சுபாஷ் நகரைச் சேர்ந்த முருகன் மகன் அருண்பிரசாத் (21) என்பவர் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.