மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் வெளியிட்டுள்ள அறிக்கை

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன்  வெளியிட்டுள்ள அறிக்கை

தேர்தலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட மக்களை ஏமாற்றும் மத்திய பட்ஜெட்
மத்திய அரசு அளித்திருக்கும் இடைக்கால பட்ஜெட் ஏழை , எளிய, நடுத்தர மக்களை ஏமாற்றி, பணம் படைத்தவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காஸ், பெட்ரோல் , டீசல் விலை குறைப்பு பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடவில்லை . பட்ஜெட்டில் வரிச்சலுகையும் இல்லை , புதிய வரியும் இல்லை என்று அறிவித்திருப்பது மக்களை எமாற்றும் செயல் ஆகும். ஆட்சி பீடத்தில் பல ஆண்டுகளாக இருப்பதிலிருந்து தொடர்ந்து மக்களிடத்தில் அதிகப்படியான வரியை பெற்றுக்கொண்டு, இன்று எதிர்கொள்ள விருக்கும் நாடாளுமன்ற  தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வரிவிதிப்பு இல்லை என்று கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் மாறாக பாராளுமன்ற  தேர்தலில்  சரியான பாடம் புகட்டுவார்கள். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் கொடுப்போம் என்கிற அறிவிப்பு  தோட்டம் நிலைக்கல தெண்ணங்கன்று வைப்போம் என்பது போல உள்ளது. ஏழை எளிய  மக்களுக்கு எதிராக செயல்பட்டு , கடந்த பட்ஜெட்டில் நாங்கள் அறிவித்த திட்டத்தில் இவ்வளவு பேர்  பயன் அடைந்து இருக்கிறார்கள் என்று கூறி தனது கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் சலுகை செய்தது எந்தவிதத்தில் நியாயம் ?. மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வளர்ச்சி மற்றும்  வாழ்வாதாரம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாகவும், மகாத்மாகாந்தி ஊரக கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டமோ, கிராமப்புற தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு திட்டத்தை பற்றியோ, பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை பற்றியோ எதுவும் பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இந்த இடைக்கால பட்ஜெட் எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் இல்லாத சந்தர்ப்பவாத பட்ஜெட் ஆகும். குறிப்பாக ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு காணல் நீராகி விட்ட  இந்த மக்கள் விரோத பட்ஜெட்டிற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் 
Previous Post Next Post