மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் R.L. வெங்கட்டராமன் கோரிக்கை
புதுச்சேரி மாநிலத்தின் தனித்தன்மையை காத்திட எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட, எந்த கட்சி வேட்பாளர் அறிவித்தாலும் அவர் புதுச்சேரி மண்ணின் மைந்தராக இருக்கவேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் மனதில் கொள்ள வேண்டும்.புதுச்சேரி மாநிலத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு சில அரசியல் கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தை சாராத வெளி மாநிலத்தை சார்ந்த நபர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் போவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக கருத்து நிலவுகிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது நமது புதுச்சேரி மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம் ஆகும், புதுச்சேரியை பொருத்தவரை ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி மட்டுமே உள்ளது. அதனையும் வெளி மாநில நபர்களுக்கு தாரை வார்ப்பது புதுச்சேரி மக்களின் உரிமையையும் தன்மானத்தையும் , விட்டுக் கொடுப்பதற்கு சமம் ஆகும். ஆகவே எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மண்ணின் மைந்தருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை புதுச்சேரி பொறுப்புத் துணைநிலை ஆளுநர் பதவியில் நியமித்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர் என்றால் , அது நிரந்தரமாக ஒருவரை நியமிக்கப்படும் வரைதான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். அதை விடுத்து தற்காலிகமாக என்று நியமித்து விட்டு , புதுவைக்கு நிரந்தர துணை நிலை ஆளுநரை நியமிக்காமல், மத்திய அரசு காலம் கடத்தி தனது சுயநலத்திற்காக புதுவை மக்களை வஞ்சிப்பது எந்த விதத்தில் நியாயம்.,? அவர் பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகித்தால் நடைபெற உள்ள புதுச்சேரி பாராளுமன்றத் தேர்தல் நியாயமாக நடைபெறுவது
கேள்விக்குறியாகும்?. எடுத்துக்காட்டாக கடந்த 2021 ஆண்டு மே மாதம் முதல்வர் ரங்கசாமி பதவியேற்ற சில நாட்களிலேயே, சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் பா.ஜ.க கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு திடீரென மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமித்து கூட்டணி தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதை நினைவு கூற ஆசைப்படுகிறேன். ஆகவே புதுவை பாராளுமன்ற தேர்தல் நேரத்தில், புதுச்சேரி பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பொறுப்பில் இருந்தால், புதுவை மாநிலத்தின் அரசு இயந்திரங்கள், அரசு உயர் அதிகாரிகள் மறைமுகமாக இவரின் கட்டுப்பாட்டில் செயல்படலாம் என்ற அச்சம் எழுகிறது எனவே பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே புதுச்சேரி மாநில பொறுப்பு துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்றும், புதுச்சேரிக்கு நிரந்தர துணைநிலை ஆளுநரை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்...