தூத்துக்குடி : பிரதமர் திறந்து வைக்கவிருக்கும் வெளி துறைமுகத்திற்கும் வ.உ.சிதம்பரனார் பெயர் - கனிமொழி MP கோரிக்கை.!
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், நாளை பிரதமர் அவர்களால் திறக்கப்படவிருக்கும் வெளி துறைமுகத்திற்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனி மொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று ( செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார்.
இன்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மதுரை செல்லும் அவர் நாளைய தினம் (புதன்கிழமை) காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தூத்துக்குடியில் 28-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் முழு விபரம்
பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி துறைமுக பள்ளி அருகே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை ( செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார்.
நாளை மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் மதுரை செல்லும் அவர் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் துறைமுக பள்ளி விளையாட்டு மைதானம் அருகே நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அந்த வகையில் குலசேகரன்பட்டினத்தில் புதிதாக அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதள பணிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் துத்துக்குடி வ.உ.சி. துறைமுக விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி வெளித்துறைமுக சரக்கு பெட்டக முனையங்கள் அமைத்தல், வடக்கு சரக்கு கப்பல் தளம்-3 எந்திர மயமாக்கல், நாளொன்றுக்கு 5 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதேபோல் ரூ.550 கோடியில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள புதிய ரெயில்வே தூக்கு பாலத்தை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
இந்நிலையில் இது குறித்து பிரதமருக்கு கனிமொழி MP கோரிக்கை விடுத்துள்ளார், அதில் "தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில், நாளை பிரதமர் அவர்களால் திறக்கப்படவிருக்கும் வெளி துறைமுகத்திற்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரைச் சூட்ட வேண்டுமென்று " வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்- அஹமத்
புகைப்படம் - சித்திக்