நம்பியூரில் வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் தொடர்ந்து இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் நம்பியூரில் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு இரண்டாம் நாளாக போராட்டம் நடைபெற்றதுபோராட்டத்திற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்க வட்டார தலைவர் ரகு தலைமை தாங்கினார்.போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர்கள் கூறிய போது வருவாய்த்துறை அலுவலர்களின் பணியிறக்கம், பெயர் மற்றும் விதி திருத்தம் செய்தல், அலுவலக உதவியாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.நம்பியூர் தாலுகா அலுவலக நுழைவாயிலில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.