பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் மற்றும் பொருட்களுக்கான ஜிஸ்டா நிறுவனத்தின் கண்காட்சி
கோவையில் கல்லாலும்,இரும்பு,பித்தளை,செம்பு போன்ற உலோகங்களாலும் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் மற்றும் அழகு பொருட்களுக்கான கண்காட்சி நடைபெற்றது…
சமீபகாலமாக பாரம்பரிய உணவு முறை குறித்த விழிப்புணர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் தேடுதலிலும் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது..இந்நிலையில் சென்னை மற்றும் பெங்களூருவில் செயல்பட்டு வரும் ஜிஸ்டா நிறுவனம் பாரம்பரிய சமையல் பாத்திரங்கள்,அழகு கலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.ஆன்லைனிலும் செயல்படும் ஜிஸ்டா இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.இந்நிலையில் கோவையில் மூன்று நாள் கண்காட்சியை ஜிஸ்டாவின் இயக்குனர்கள் மீரா ராதாகிருஷ்ணன், அர்ச்சிஷ் மாதவன், வரிஷ்டா சம்பத் ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்..விற்பனை கண்காட்சியாக மட்டும் இல்லாமல் பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் குறித்த அனைத்து பயன்கள்,உபயோகபடுத்தும் முறைகள் குறித்தும் தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி உள்ளது..முன்னதாக நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக,ரீனா கோத்தாரி,சந்தோஷி ராஜேஷ்,அபர்ணா சுரேன்,ரூபா மோகன்தாஸ்,ரோஷினி,கோத்தா ஹரி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்..கண்காட்சியில் குறிப்பாக கல் சட்டிகள், உருளிகள், ஈயப்பாத்திரங்கள்,இரும்பு சட்டிகள், வெண்கல பானைகள், சொம்புகள்,என கல்லாலும், உலோகங்களாலும் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சமையல் பாத்திரங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன..பல்வேறு விதமான கெமிக்கல் கோட்டிங் நிறைந்த பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ள நிலையில், உணவோடு சேர்த்து இரும்புச் சத்து,ஹீமோகுளோபின் குறைபாடு நீக்குவது என ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பாரம்பரிய சமையல் பாத்திரங்களை வாங்க ஜிஷ்டாவின் கண்காட்சியை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்…