தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் திருப்பூரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
வேலன் விளைப் பொருள்களுக்கு ஆதார விலை , விவசாய கடன் தள்ளுபடி , விவசாயிகளுக்கு ஓய்வூதியம் , மின்சார சட்ட திருத்த மசோதா ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.