*மாசி மகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக் கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க தண்ணீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்திட சமூக ஆர்வலர் அ.அப்பர் சுந்தரம் கோரிக்கை!* மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக முக்கியத்துவம் மிகுந்த பகுதியாகும். கங்கை தன் பாவத்தை போக்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதியில் வாசம் செய்வதாக ஐதீகம். அதனடிப்படையில் சிறப்பும் புண்ணியமுமிக்க பகுதியான மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி கரைகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தின் பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தங்கள் முன்னோருக்கு நீர்த்தார் கடன் எனப்படும் தர்ப்பணம் செய்து புனித நீராடும் நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம். வரும் 24ஆம் தேதி சனிக்கிழமை மாசி மக தினத்தில் மயிலாடுதுறை துலாக் கட்ட காவிரி பகுதிக்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக தற்பொழுது காவிரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடப்பதால் துலாக் கட்ட பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போர்வெல் வாயிலாக தொட்டியில் தண்ணீர் திறந்து விடவும் கடந்த ஐப்பசி மாதம் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ஏற்படுத்திய பொது மக்கள் புனித நீராடிட ஏதுவாகவும் தண்ணீர் வசதி குழாய்கள் மூலம் செய்திட வேண்டும். மேலும் அப்பகுதி முழுவதும் குப்பை கூலங்களை அகற்றி தூய்மைப் படுத்திடவும், மகாமக தினத்தில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்திடவும் பொதுமக்களுக்கான நடமாடும் தற்காலிக கழிவறைகள் அமைத்து தரவும், பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.