*ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய கண்காட்சி*
கோவை, துடியலூர் வட்டமலைபாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் பயன்பாடுகள் பற்றிய கண்காட்சி நடைபெற்றது.
துவக்க விழா நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் N.R.அலமேலு தலைமை தாங்கினார். கல்லூரியின் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் துறை தலைவர் முருகராஜன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக விப்ரோ பாரி நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் அனில் தேசிங்கே மற்றும் மனிதவள மேம்பாட்டுதுறை தலைவர் சைத்தன்ய சிந்தே ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் வெவ்வேறு மாநிலங்களிலிருந்து பள்ளி, பாலிடெக்னிக் மற்றும் அனைத்து கல்லூரிகளை சேர்ந்த 400 மாணவ மாணவிகள் 200 குழுக்களாக இன்னோ வேட் - எயிட்- ஹப் , ப்ராஜெக்ட் எக்ஸ்போ (சீனியர் மற்றும் ஜூனியர்), லைன் ஃபாலோவர் (சீனியர் மற்றும் ஜூனியர்), ரோபோ ரேஸ், ரோபோ சாக்கர், ட்ரோன் ரேஸ் மற்றும் வினாடி வினா என பல்வேறு ரோபோ நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டனர்.
ப்ராஜெக்ட் எக்ஸ்போவில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ( ஐ ஓ டி) அடிப்படையிலான ரோபோ அமைப்புகள், அக்வாபோட், ரோவர் மற்றும் யூ எ வி ட்ரோன்கள் உட்பட பல்வேறு ரோபோக்கள் இடம்பெற்றன.
ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷனில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் விப்ரோ பாரி நிறுவனம் சிறந்த திறமையாளர்களை அங்கீகரிப்பதற்காக ரூ. 2.5 லட்சம் இவ்விழாவுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தது குறிப்பிடத்தக்கது.