*சர்வதேச மற்றும் தேசிய அளவிலான இரு வேறு தற்காப்பு கலை போட்டிகளில் பதக்கம் பெற்ற கோவைக்கு பெருமை சேர்த்த பள்ளி மாணவர்கள்*…
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான தற்காப்பு கலை போட்டிகளில் பதக்கம் வென்று கோவை திரும்பிய பள்ளி மாணவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு…
அண்மையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐந்தாவது தேசிய அளவிலான குவான் கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.தமிழகம்,கர்நாடகா,அரியானா,மத்தியபிரதேசம்,என சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட மாநிலங்களை சேரந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்ட இதில்,தமிழகம் சார்பாக தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி மாணவரான பரத் விக்னேஷ் கலந்து கொண்டார்.இதில் க்வான்,ஃபுல் கான்டாக்ட்,மற்றும் லைட் கான்டாக்ட் என மூன்று பிரிவுகளில் ஒரு தங்கம்,வெள்ளி,மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.இதே போல குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ.அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஆஸ்ரம் பள்ளி மாணவரான யஹயா அயாஸ் டில்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் பாய்ண்ட்,மற்றும் லைட் கான்டாக்ட் என இரு பிரிவில் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்..அமெரிக்கா, பிரிட்டன்,ரஷ்யா,துபாய் என பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில் சிறுவன் யஹயா பதக்கம் பெற்று கவனத்தை ஈர்த்துள்ளார்.இந்நிலையில் கோவை விமான நிலையம் திரும்பிய மாணவர்கள் பரத் விக்னேஷ்,யஹயா மற்றும் பயிற்சியாளர்கள் சதீஷ்,பிரேம் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் நிர்வாகி கவுரி உதயேந்திரன் கோவைக்கு பெருமை சேர்த்த இரு மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்…
ஒரே பள்ளியில் பயின்ற மாணவர்கள் இரு வேறு போட்டிகளில் பதக்கம் வென்று திரும்பியதை ஆஸ்ரம் பள்ளி மாணவ,மாணவிகள்,ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் விமான நிலையம் முன்பாக கேக் வெட்டியும்,இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.