அரியானாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யூத் கேம் சிலம்பம் போட்டியில் பதக்கங்களை குவித்த கோவை சூலூர் ரௌத்ரா சிலம்பம் அகாடமி வீரர்கள்
யூத் கேம் சிலம்பம் பெட்ரேசன் ஆப் இந்தியா சார்பாக அரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான சிலம்பம்,யோகா,கால்பந்து,கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. தேசிய அளவில் நடைபெற்ற இதில், கேரளா,தமிழ்நாடு, தெலுங்கானா ,ஆந்திரா கர்நாடகா ஹரியானா,உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.. இதில் தமிழகம் சார்பாக கோவை சூலூர் பகுதியை சேர்ந்த ரௌத்ரா சிலம்பம் அகாடமியை சேர்ந்த மாணவ,மாணவிகள் சிலம்பம் மற்றும் யோகா போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடினர்… சப்-ஜூனியர், ஜூனியர், யூத் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன…இதில் தொடுமுறை,ஒற்றை மற்றும் இரட்டை கம்பு,வாள் வீச்சு என அனைத்து பிரிவிகளிலும் கோவையில் இருந்து சென்ற 27 மாணவ,மாணவிகளும் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.21 தங்கம்,4 வெள்ளி,3 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை குவித்து கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.இதில் பயிற்சியாளர்கள் வெங்கடேஷ்,வினோத் குமார்,சூரியநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.. தேசிய அளவில் நடைபெற்ற இதில் அனைத்திந்திய சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழக அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது..