கோவையில் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து நடைபெற்ற கிட்ஸ் மினி மாரத்தான் போட்டியில் ஃபெய்த் மாடல் பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
ஆரோக்கிய வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை வலியுறுத்தி ரன் ஃபார் பிட் எனும் கிட்ஸ் மாரத்தான் போட்டி கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஃபெய்த் மாடல் பள்ளி சார்பாக நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில்,பள்ளியின் தலைவர் டாக்டர் பசுலுல்லா தலைமை வகித்தார்.செயலாளர் ஃபைசல்,அகாடமிக் இயக்குனர் ஆமினா ஃபைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் செந்தி்ல் குமார்,அட்வென்சர் அகாடமி மார்ஷியல் ஆர்ட் மையத்தின் இயக்குனர் சென்சாய் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியில்,ஆர்வமுடன் மழலை குழந்தைகள்,பள்ளி மாணவ மாணவிகள்,பெற்றோர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு .2 மற்றும் 5 கிலோ மீட்டர், என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இதில்,செட்டிபாளையம் பிரதான சாலையில் வழியே சென்று மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.தொடர்ந்து அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்களை டாக்டர் பசுலுல்லா, மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கி உற்சாகபடுத்தினர்..நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் முதல்வர் சுமையா நன்றியுரை வழங்கினார்..