ஈரோடு மாவட்டம் , சத்தியமங்கலத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம். வெறிச்சோடிய வட்டாச்சியர் அலுவலகம். பொதுமக்கள் ஏமாற்றம்..

 

தமிழகம் முழுவதும்,தமிழ்நாடு வரு வாய்  துறை அலுவலர்கள் சங்கம் சார் பில், தொடர் வேலை நிறுத்த போராட் டம் நடை பெற்று வருகிறது.அதன்ஒரு பகுதியாக,சத்தியமங்கலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், சத்திய மங்கலம் வருவாய் வட்டாட்சியர் மாரி முத்து தலைமையில், வருவாய் துறை அலுவலர்சங்கத்தினர்,கீழ்கண்டகோரிக்கைகளை வலியுறுத்தி கால வரை யற்வேலைநிறுத்தப்போராட்டத்தில்,  ஈடுபட்டுள்ளனர்.துணை வட்டா ட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாது காப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும்.வருவாய் மற்று ம் பேரிடர் மேலாண்மைத் துறை யில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலி யாக உள்ள அலுவலக உதவியா ளர் பணியிடங்களைஉடன் நிரப்பிட வே ணடும்.அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிட ஙகளை உட னடியாக ஏற்படுத்திட வேண்டும்.அனைத்து மாவட்டங்களி லும் பேரிடர் மேலாண்மைப் பணிக் கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03. 2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணி யிடங்களை மீண்டும் வழங்கிட வேண் டும். 2024 பாராளுமன்ற தேர்தல் பணி களைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமை யான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும். உங்கள் ஊரில் உங்களைத் தேடி. மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்டப் பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படு வதைத் தவிர்த்து திட்டப் பணி களை, செம்மையாக மேற் கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றையும் உடனடியாக வழங் கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி, சத்தியமங்கலம் வட்டாச்சியர் அலுவல கத்தில் வருவாய்துறையின் பல்வேறு பிரிவுகளில், பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள், இன்று கால வரையற்ற வேலை நிறுத்தப் போரா ட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். 


வேலைநிறுத்தப்போராட்டத்தில்,சமூக நலத்திட்டவட்டாச்சியர் உமா மகேஸ் வரன், வட்ட வழங்கல் அலுவலர் ஜெக நாதன், வருவாய் ஆய்வாளர் ஜீவன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர் கள்பங்கேற்றுள்ளனர்.வருவாய்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம் கார ணமாக, சத்தி வட்டாச்சியர் அலுவல கம் வெறிச்சோடிய நிலையில், மனு அளிக்கவும், சான்றிதழ் விபரம் அறிய வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Previous Post Next Post