தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைந்தனர்.

தூத்துக்குடியில் திமுக,அதிமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக்  கட்சியை சார்ந்த 200 க்கும் மேற்பட்டோர் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் பாஜகவில் இணைந்தனர் .

தூத்துக்குடியில் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன், முன்னிலையில் 200 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.



தூத்துக்குடி வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் விழா மாநகராட்சி 3 வது வார்டு ஹவுசிங் போர்டு காலனியில் நடைபெற்றது.

இந்த இணைப்பு விழா நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா தலைமையில் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன், முன்னிலையில் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா விழா சிறப்புரையாற்றினார். 

அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட பிரதிநிதி அஜய் கோஸ், மாப்பிள்ளையூரணி காங்கிரஸ் ஊராட்சி செயலாளர் வேல்ராஜ், காங்கிரஸ் ஒன்றிய மகளிர் அணி தலைவி பழனியம்மாள், இரண்டாவது வார்டு அதிமுக பொருளாளர் பால்ராஜ், அதிமுக மருத்துவர் காலனி கிளைச் செயலாளர் செல்வகுமார், அதிமுக 3வது வார்டு ஹவுசிங் போர்டு பொறுப்பாளர் நாகராஜ், அதிமுக 3வது வார்டு பிரமுகர் இசக்கியப்பன்  தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் 200 க்கு மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில்  வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார்,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வீரமணி, அமைப்பாளர் லிங்கராஜ் , வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த இணைப்பு விழாவிற்கான ஏற்பாட்டினை வடக்கு ஒன்றிய தலைவர் செல்வராஜ்  செய்திருந்தார்.

 

Previous Post Next Post