பெண்களுக்கான பிரத்யேக தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியம் தொடர்பான அழகு கலை மையமான கே.வி. ஏஸ்தடிக் கிளினிக் கோவையில் தனது புதிய கிளையை துவக்கியது..
சென்னையில் பிரபலமான கே.வி.ஏஸ்தடிக் கிளினிக் என்ற தோல் மற்றும் கூந்தல் ஆரோக்யத்திற்கான சிறப்பு மையம் கோவையில் தனது புதிய கிளையை துவக்கியது... இதற்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பார்க் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி கலந்து கொண்டு புதிய மையத்தை திறந்து வைத்தார்..புதிய ஏஸ்தடிக் கிளினிக்கில் உள்ள வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து நிர்வாக இயக்குனர் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி கூறுகையில்,முழுவதும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன உபகரணங்களை கொண்டு,தோல் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த இந்த மையத்தில் வசதிகள் இருப்பதாக தெரிவித்தார்.. மேலும்,முகங்களில் வரும் பருக்களால் ஏற்படும் தழும்புகளை, அகற்றுவதற்கான சிறப்பு சிகிச்சைகள், . தேவையற்ற முடி அகற்றுதல், மச்சம் மற்றும் கரும்புள்ளிகள் அகற்றுதல், வழுக்கை, முடிஉதிர்தல்,போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நவீன கூந்தல் மாற்று சிகிச்சை, கூந்தல் ஆரோக்யத்திற்காக லேசர் மற்றும் நவீன சிகிச்சைகளும் மற்றும் அறுவை சிகிச்சையில்லாத அழகியல் சிகிச்சை முறைகளும் , மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்..நிகழ்ச்சியில் கிளினிக்கின் நிர்வாக இயக்குனர் ஜனார்த்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்…