கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்த அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஹென்றிக்கு கோவை விமான நிலையத்தில் கோவை ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் கண்ணன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பாக ரியல் எஸ்டேட் தின எழுச்சி மாநாடு கோவை ஜென்னிஸ் ஓட்டலில் நடைபெறுகிறது..இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய தலைவர் ஆ.ஹென்றி கலந்து கொள்ள கோவை வந்தார்.இந்நிலையி்ல் கோவை விமான நிலையம் வந்த அவருக்கு ஜெயம் லேண்ட் புரோமோட்டர்ஸ் கண்ணன் தலைமையில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. முன்னதாக அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் விதமாக ஜெயம் லேண்ட் புரோமோட்டர் ஊழியர்கள் ஹென்றி அவர்களுக்கு வரிசையாக நின்று ரோஜா பூக்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.தொடர்ந்ரு ஜெயம் லேண்ட் நிறுவனத்தை சேர்ந்த பெண் ஊழியர் ஒருவருக்கு நிறுவனத்தின் சார்பாக திருமண உதவி தொகை வழங்கப்பட்டது.இதற்கான காசோலையை ஹென்றி வழங்கினார்.