திருப்பூரில் 233 வது மற்றும் 234 வது தொகுதிகளாக திருப்பூர் வடக்கு, தெற்கு தொகுதிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் சென்றார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் என் மக்கள் என்ற பெயரில் நடை பயண யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில் அனைத்து தொகுதிகளையும் முடித்து விட்ட நிலையில் 233 மற்றும் 234 வது தொகுதிகளாக, திருப்பூர் மாநகரில் உள்ள திருப்பூர் வடக்கு மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதிகளில் அவர் இன்று நடைப்பயணம் மேற்கொண்டார். திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தனது நடை பயணத்தை தொடங்கிய அண்ணாமலை அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இடையே கைகொடுத்து உற்சாகத்தை பகிர்ந்து கொண்டார். நடை பயணத்திற்கு வந்த அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பாஜக தலைவர்
அண்ணாமலை, 'திருப்பூர் என்றால் பீனிக்ஸ் பறவை போல் உழைத்து முன்னேற கூடிய மக்கள் இருக்கும் இடம். தமிழக அரசை புரட்டி போட கூடிய வகையில் இந்த யாத்திரை இருக்கும். அடுத்த பிரதமர் யார் என்று தெரிந்து வாக்களிக்கும் தேர்தல் இது. ஆனால் அது 400 அல்லது அதற்கு மேலாக என்பது தான் கணக்கு.. மோடி மக்களை சந்திக்கும் கூட்டம் இது எனவே மக்கள் தங்கள் குடும்பத்துடன் அங்கு வர வேண்டும். வேள் யாத்திரை 4 சட்டமன்ற உறுப்பினர்களை கொடுத்தது, இந்த யாத்திரை 40 பாராளுமன்ற உறுப்பினர்களை கொடுக்க போகிறது. என்றார்.