கோபி அருகே மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலி

 

ஈரோடு மாவட்டம்,கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை க.மேட்டுப்பாளையத்தை சார்ந்த  நாகப்பன் மகன் சிவக்குமார் (47) கூலித் தொழிலாளி, இவருக்கு சொந்தமான மூன்று ஆடுகளை நேற்றிரவு வீட்டின் முன் கட்டியிருந்ததை அடுத்து மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகளும் இறந்தது. காலையில் எழுந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்த சிவக்குமார்வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார், அதனை தொடந்து டி.என் பாளையம் வனச்சரக வனத்துறை காவலர் சீனிவாசன், சரவணக்குமார் விசாரணை மேற்கொண்டு ஆய்வு செய்தனர், வனத்துறையினர் தரப்பில் நாய்கள் கடித்ததால் இறந்திருக்கும் என கூறினர். இருப்பினும் அப்பகுதி பொதுமக்கள் வனவிலங்கு. சிறுத்தை கடித்து இருக்கலாம் என அச்சமடைந்துள்ளனர். இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இரவு நேரங்களில் மர்ம விலங்குகள் நடமாட்டத்தை  கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கையும் வைக்கின்றனர்.

Previous Post Next Post