கோவை செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முப்பெரும் விழா நிகழ்ச்சி
கோவை மாநகராட்சி 80வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கதை, கட்டுரை, நடனம், நாடகம், ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும்,
கோவை மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் 8ம் வகுப்பு மாணவி துர்கா ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
உடன் வார்டு செயலாளர் நா.தங்கவேலன், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.