தேசிய அளவிலான தடகள போட்டி பதக்கம் வென்ற கோவை மாணவி

தேசிய அளவிலான தடகள போட்டி பதக்கம் வென்ற கோவை மாணவி

தேசிய அளவிலான தடகள போட்டியில் தடையோட்ட போட்டியில் பதக்கம் வென்று கோவை திரும்பிய மாணவிக்கு உற்சாக வரவேற்பு.
அகில இந்திய தடகள சங்கம் சார்பாக குஜராத்தில்   19 ஆவது தேசிய அளவிலான தடகள போட்டிகள் அண்மையில் நடைபெற்றது..இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5000 த்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்ட இதி்ல்,தமிழ்நாடு சார்பாக,கோவை மாவட்ட  தடகள சங்கத்தின் சார்பாக 13 பேர் பங்கேற்றனர்.  இதில் 16 வயதுக்கு உட்பட்டோர்  பிரிவில் , கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும், அபிநயா 80 மீட்டர்  தடையோட்ட  போட்டியில் வெண்கல பதக்கம்  வென்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்..இந்நிலையில் கோவை திரும்பிய அபிநயாவிற்கு,சர்வதேச தடகள வீராங்கனை மைதிலி,கோவை ஸ்போரட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் ஜோஷ்வா செல்லதுரை,மார்ஷல், அகாடமி துணை தலைவர் கிருஷ்ணகுமார், மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்,வீராங்கனைகள் சார்பாக கோவை இரயி்ல் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..
Previous Post Next Post