பஞ்சு மிட்டாய்க்கு தடை போல உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்கெட் திண்பண்டங்களுக்கும் தடைவிதிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை

பஞ்சு மிட்டாய்க்கு தடை போல உடலுக்கு கேடு விளைவிக்கும்  பாக்கெட் திண்பண்டங்களுக்கும் தடைவிதிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை !       
 பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் நஞ்சு வேதிப்பொருட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  பஞ்சு மிட்டாய்க்கு தடை போல உடலுக்கு கேடு விளைவிக்கும்  பாக்கெட் திண்பண்டங்களுக்கும் தடைவிதிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   
பஞ்சு மிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட மிட்டாய்வகைகளை அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்ததில் ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டி வேதிப்பொருள் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, தரம் குறைவான மற்றும் பாதுகாப்பற்ற உணவு என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 பிரிவின்படி, ரொடமைன் பி எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவு பொருட்கள் தயாரித்தல், பொட்டலமிடுதல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும்.  
 ரோடமைன் பி நச்சுப்பொருள் ஜவுளி உற்பத்தி துறையில் சாயத் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகிறது. குறைந்த செலவில் மக்கள் மனம் கவரும் வண்ணத்தை கொடுப்பதால் பஞ்சு மிட்டாயில் பயன்படுத்தப்படுகிறது.
இயற்கை உணவுகளில் உள்ள வண்ணங்கள் நமது உடலில் இருந்து 24 மணி நேரத்தில் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் இதுபோன்ற நச்சு வண்ணங்கள் வெளியேற 45 நாட்கள் ஆகும். இது உடலில் தங்கி சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டலம், மூளை போன்றவற்றை பாதிக்கும். இவை உடல் செல்களில் உள்ள மரபணுக்களை சிதைக்கும் திறன் உடையவை. அதனால் இவற்றை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஞ்சுமிட்டாய் போல குழந்தைகள் அதிகம் உண்ணுகின்ற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்ற சிப்ஸ் இனிப்பு வகைகள் நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தி குழந்தைகளின் உடலை பாதிக்கின்ற அத்தனையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம். ஆரோக்கியமான  எதிர்கால சமூகம் அமைய இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் மிக மிக அவசியமாகும் எனவே பஞ்சு மிட்டாய்க்கு தடை விதித்ததுபோல உடலுக்கு கேடு விளைவிக்கும்  பாக்கெட் திண்பண்டங்களுக்கும் தடைவிதிக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Previous Post Next Post