உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரன் ஃபார் கேன்சர் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்
அப்டவுன் கன்ஃபிடிட்டி சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ரன் ஃபார் கேன்சர் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிகளை தமிழ்நாடு காவல், கோவை மாநகர பிரிவின் ஹோம் கார்ட்ஸ், டெபுட்டி ஏரியா கமாண்டரும், நேச்சுரல் சயின்ஸ் ஃபவுண்டேஷன் இயக்குனரும் அயன் புல் கன்சல்டிங் தலைமை நிர்வாக அதிகாரியும் மற்றும் சக்திராம் பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலருமான திருமதி தேன்மொழி ராஜாராம் புரோடிஜி சர்வதேச மாண்டிச்சேரி பள்ளியின் கோ ஃபவுண்டர் மற்றும் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெயின் அரவிந்த் மற்றும் புட்லூஸ் எட்வின்'ஸ் டான்ஸ் ஸ்கூல் பவுண்டரும், டான்ஸ் குரோரியோகிராபர், கஸ்டியும் டிசைனரும் பிட்னஸ் இன்ஸ்ட்ரக்டருமான எட்வின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் 1 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் என்று 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 10 கிலோமீட்டர் ஆண்கள், 5 கிலோமீட்டர் ஆண்கள், பெண்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு 1 கிலோமீட்டர் என போட்டிகள் நடைபெற்றது. இதற்கான பிரிவில் குழந்தைகளுடன் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இதில் 2000-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு மொத்தம் பரிசு தொகையாக ரூபாய் 68,000 வழங்கப்பட்டது.
ஆண்கள் 10 கிலோ மீட்டர் பிரிவிற்கு முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூபாய் 7,500 மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 5,000 வழங்கப்பட்டது.
5 கிலோமீட்டர் பிரிவிற்கு முதல் பரிசாக ஆண், பெண், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 4 பேருக்கும் தல 5 ஆயிரம் விகிதமாக 20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ஆண், பெண், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 4 பேருக்கும் தல 4 ஆயிரம் விகிதமாக 12 ஆயிரமும்,
மூன்றாம் பரிசாக ஆண், பெண், மாணவ மற்றும் மாணவியர்களுக்கு 4 பேருக்கும் தல 2 ஆயிரம் விகிதமாக 8 ஆயிரமும் வழங்கப்பட்டது.
குழந்தைகளுக்கான 1 கிலோமீட்டர் போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 2,500, இரண்டாம் பரிசாக 2,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 1,000 வழங்கப்பட்டது.
10 கிலோமீட்டர் போட்டியானது கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கி, நேரு ஸ்டேடியத்தை ஒரு முறை சுற்றி வந்து, கேரளா கிளப் வழியாக, மகளிர் பாலிடெக்னிக் வந்து யூ டர்ன் செய்து, அண்ணா சிலை வழியாக ஓசூர் சாலை, கே ஜி மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், ரெட்ஃபில்ட் வழியாக நிர்மலா கல்லூரியை அடைந்து யூ டர்ன் செய்து மீண்டும் ரெட் பீல்ட், தாமஸ் பார்க், மாவட்ட ஆட்சியர் பங்களா வழியாக மீண்டும் கே ஜி மருத்துவமனை வழியாக வந்து நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது.
5 கிலோமீட்டர் போட்டியானது கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கி, நேரு ஸ்டேடியத்தை ஒரு முறை சுற்றி வந்து, கேரளா கிளப் வழியாக, மகளிர் பாலிடெக்னிக் வந்து யூ டர்ன் செய்து, அண்ணா சிலை வழியாக ஓசூர் சாலை, கே ஜி மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க், மாவட்ட ஆட்சியர் பங்களா வழியாக மீண்டும் கே ஜி மருத்துவமனை வழியாக வந்து நேரு ஸ்டேடியத்தில் நிறைவடைந்தது.
1 கிலோமீட்டர் போட்டியானது நேரு ஸ்டேடியத்தை ஒரு முறை சுற்றி வந்தது.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அப்டவுன் கன்ஃபிடிட்டி நிர்வாகிகள் சுபா மற்றும் குழுவினர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஸ்பான்ஸர்களாக புரோடிஜி சர்வதேச மாண்டிச்சேரி பள்ளி, ஆனைகட்டி, எஸ். ஆர். ஜங்கிள் ரிஷார்ட்ஸ் மற்றும் ஆரா ஜங்கிள், டிஜிட்டல் பார்ட்னராக கோவை சிட்டி, ஸ்போர்ட்ஸ் பார்ட்னராக டக்களத்தான், ஹாஸ்பிடல் பார்ட்னராக பி எஸ் ஜி மருத்துவமனை, பேவரேஜ் பார்ட்னராக ரெயின் டிராப்ஸ், சேனல் பார்ட்னராக அசோகா டிவி, மேகஸின் பாட்னராக காவலர் வாய்ஸ், ஸ்னாக்ஸ் பார்ட்னராக ஆப்பிள் ஆர்கானிக்ஸ் மற்றும் ஃபுட் பார்ட்னராக என் எஸ் கேட்டரிங் ஆகியோர் இருந்தனர்.