தூத்துக்குடியில் திமுகவினர் சார்பாக அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு.

தூத்துக்குடியில் திமுகவினர் சார்பாக அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு.
 
நெல்லைக்கு  பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வழியாக  சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் வைத்து திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த ' பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சாலை மார்க்கமாக நெல்லைக்கு சென்ற தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை, தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட்டில் வைத்து, வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Previous Post Next Post