சமூக பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுகளே அவர்களை ஊக்கபடுத்தும் என தந்தை பெரியார் திராவிடர் கழக விழாவில் கலந்து கொண்ட பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி பேச்சு
கோவையில் மேடை அலங்காரம் மற்றும் மக்கள் பணியில் 35 ஆண்டுகள் பணியாற்றி உள்ள தோழர் டிஸ்கோ காஜாவிற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன்,மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபாலன்,உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர்,சமுதாய பணியில் ஈடுபடுபவர்கள் எப்போது கவுரவிக்கப்பட வேண்டும் எனவும்,அதுவே அவர்களை மேலும் சமூக பணி செய்ய ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என பேசினார்.தொடர்ந்து நிகழ்ச்சியில் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியல் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் வழக்கறிஞர் இஸ்மாயில்,அபு,உட்பட பலர் கலந்து கொண்டனர்.