திருப்பூரில் மிக இளையோர் மாநில கபடி போட்டிக்கான வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான மிக இளையோர் கபடி போட்டிக்கான மாணவர் தேர்வு திருப்பூரில் நடைபெற்றது. இதில்100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 

எதிர்வரும் மார்ச் மாதம் பீகாரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான சப் ஜூனியர் பிரிவு வீரர்களுக்கான சேம்பியன்ஷிப் போட்டிகளில், தமிழக அணியின் சார்பில் கலந்துகொள்ளத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் பொறுக்குத் தேர்வு போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சுமார் ஐந்து வீரர்கள் தேர்வு செய்து, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத்தின் சார்பில்  நாளை (18.02.2024, ஞாயிற்றுக்கிழமை) சேலம் மாவட்டம், தாழையூர், சாமி ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெறும், மாநில அளவிலான பொறுக்குத் தேர்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாநில அளவில் தேர்வுபெறும் சுமார் 12 வீரர்கள் தமிழக அணி சார்பில் சப் ஜூனியர் அணியில் விளையாடவுள்ளார்கள்.

அதன்படி, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத்தின் சார்பில், மாவட்ட அளவில் 16 வயதுக்குட்பட்டோர் வீரர்களுக்கான பொறுக்குத்தேர்வுப் போட்டிகள், மாவட்ட கபாடிக் கழக அலுவலக மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 110 பேர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத்தின் சேர்மன் கொங்கு முருகேசன் தலைமையில் நடைபெற்ற இன்றைய தேர்வுப் போட்டியில், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடிக் கழகத்தின் பொருளாளரும், திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத்தின் செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம், மாவட்ட செய்தித் தொடர்பாளர்  சிவபாலன், இணைச்செயலாளர் செல்வராஜ், தேர்வுக்குழுத் தலைவர் ருத்ரன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் ராஜு, தம்பி வெங்கடேஷ், மகேஸ், மணிகண்டன், வினோத், நடுவர் குழுத்தலைவர் ’நல்லாசிரியர்’ முத்துச்சாமி, நடுவர் குழு கன்வீனர் சேகர், இணை கன்வீனர் தண்டபாணி, டெக்னிக்கல் உறுப்பினர் ரங்கசாமி, கெளரவ உறுப்பினர் கொங்கு நல்லசிவம், நடுவர்கள் உமாபதி, சிவகுரு, நாகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மாவட்ட கபாடிக் கழகத்தின் சார்பில் அனைவருக்கும் மதிய உணவும், போட்டிகளுக்கு வந்து செல்வதற்கான பயணப்படியும் வழங்கப்பட்டது. 

பொறுக்குத்தேர்வுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். 



Previous Post Next Post