திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, தெருமுனை பிரச்சார கூட்டம், திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி திருப்பூர் தெற்கு மத்திய பகுதி மற்றும் நல்லூர் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்றது. சிடிசி கார்னரில் திருப்பூர் தெற்கு மத்திய பகுதி கழக செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி கொறடாவுமான கண்ணப்பன் , ராக்கியாபாளையம் பிரிவில் நடந்த கூட்டத்தில் நல்லூர் பகுதி கழக செயலாளர் வி.பி.என்.குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த கூட்டத்தில் ,திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில அம்மா பேரவை இணை செயலாளருமான சு.குணசேகரன், தலைமை கழக பேச்சாளர்கள் நாகராஜ், தென்றல் விஜய் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசும்போது கூறியதாவது: தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி வரும்பொழுது எல்லாம் தமிழகத்தில் அதிக பாதிக்கக்கூடிய மக்கள் திருப்பூர் மக்கள் ஆவார்,
பொதுமக்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர் வீட்டு வாடகை, கரண்ட் பில் கட்ட முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர், அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகமாகியுள்ளது, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது அதேபோன்று நிறுவனங்களில் அதிமுக ஆட்சி காலத்தில் வட்டியில்லா கடன் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை காத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் தற்பொழுது நிறுவனங்கள் அதிக அளவில் மூடப்பட்டுள்ளது, மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆட்சி காலத்தில் பொதுமக்கள் சந்தோஷமாக இருந்ததாகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும், எடப்பாடி யார் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று பேசினார்.
அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.குணசேகரன் பேசுகையில், ‘திமுக ஆட்சியில் எந்த நல்லதும் நடக்கவில்லை.விலைவாசி உயர்வு 50 சதவீதம் ஏறிவிட்டது. வரிகளை ஏற்றிவிட்டார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் எடப்பாடியார் எந்த வரியும் ஏற்றவில்லை. கொரோனா காலத்தில் 11 மாதமும் அனைத்து பொருட்களையும் ரேசன்கடையில் விலையில்லாமல் கொடுத்தவர் எடப்பாடியார். அண்ணன் எடப்பாடியார் தேர்தல் அறிக்கையில் 1500 ரூபாய் கொடுப்பதாக அறிவித்து இருந்தார். தற்போது, ஸ்டாலின் ஆட்சியில் பாதி பேருக்கும் மேல் 1000 ரூபாய் பணம் வருவதில்லை. தாலிக்கு தங்கம் இஸ்லாமிய மக்களுக்கும் கொடுத்தார்கள். பாரபட்சமின்றி மக்கள் நலனுக்காக செயல்படுவது அதிமுக மட்டும் தான். இவ்வாறு பேசினார்.
இந்நிகழ்வில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் அட்லஸ் லோகநாதன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முருகேஷ்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தம்பி மைதீன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி, வார்டு கழக நிர்வாகிகள் மயூரா நாதன், டேவிட் கோவில் பிள்ளை,புலவர் சக்திவேல், முஜிபுர் ரகுமான், முகமது பிலால், கண்ணையன்,விஜிவி.பாலு, சசிக்குமார், சக்திவேல், நாகராஜ், வசந்த்,மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் கமல் வரதராஜ், தாமோதரன், தனபால்,மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பர்மானுல்லா,மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் சையது அலி,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் சிலம்பரசன், சரவணன், ஜவகர்ராஜ், செந்தில்குமார், .தேவ் மனோகர், கேபிள் ரபீதின் சபாபதி, கேபிள் ரபிதீன், தஸ்தகீர், சரஸ்வதி, பேபி, கோமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.