இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறையின் சார்பில் கருத்தரங்கம்


கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை துறையின் சார்பில் எச்.ஐ.கிரெசென்டோ (HI-CRESCENDO) எனும் மாபெரும் கருத்தரங்கு நடைப்பெற்றது. 

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை துறையின் சார்பில் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக எச்.ஐ.கிரெசென்டோ  (HI-CRESCENDO) எனும் .எம்பவரிங் ஸ்டார்ட் அப்ஸ்,எனும் மாபெரும் கருத்தரங்கு     கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ஏ.பொன்னுசாமி துவக்கி வைத்த இதில் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சத்தை தலைமை அதிகாரி கே. கருணாகரன், மற்றும்  கல்லூரியின் செயலாளர் சரஸ்வதி, நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பல்வேறு கல்லூரியில் இருந்து கலந்துகொண்ட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுடைய சிறப்பு விருந்தினர்கள் தீபக் , ஸ்ரீகாந்த், தங்கபாண்டியன்,சந்து நாயர், ஜி.எஸ்.குமார், கிஷோர் சந்திரன், சுதாகர், ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றினர்.
இதில் தனியாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள், ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கலாமா ஆரம்பித்தால் அதனுடைய நன்மைகள், எப்படி எதிர்கொள்ள வேண்டும், ஒரு தொழில்  நிறுவனங்களை எப்படி உருவாக்கலாம், தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த கருத்தரங்கை மேலாண்மை துறை தலைவர் டாக்டர் பா சுதாகர், உதவி பேராசிரியர் திருமதி விஷ்ணு பிரியதர்ஷினி, ,மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகராஜ் சௌந்தர்ராஜன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
Previous Post Next Post