கேட் எனும் தேசிய அளவிலான ஒலிம்பியாட் திறனறிவு தேர்வில் கோவை ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை…..
பள்ளி மாணவ,மாணவிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக தேசிய அளவில் கேட் எனப்படும் தேசிய ஒலிம்பியாட் தேர்வுகள் இந்திய அளவில் நடத்தபட்டு வருகின்றன.இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வி்ல் கோவை மண்டல ஸ்ரீ சைதன்யா பள்ளிகளுக்கு உட்பட்ட 900 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்று 41 மாணவர்கள் வெற்றி பெற்று 54,000 ரூபாய் ரொக்க பரிசு, பதக்கங்களும், சான்றிதழ்களும் பெற்றனர். இதில் 4 மாணவர்கள் ரூபாய் 3000 பரிசு தொகையும்,5 மாணவர்கள் 2000 பரிசு தொகையும், 32 மாணவர்கள் 1000 ரூபாய் பரிசுத் தொகை என 54000 ரூபாய் பரிசு தொகையாக வென்றனர்..
மேலும் 356 மாணவர்கள் பதக்கங்களும், சான்றிதழ்களும் 386 மாணவர்கள் சான்றிதழ்களும் பெற்று அசத்தியுள்ளனர்.. . மேலும் அறிவு மதிப்பீட்டு தேர்வு இரண்டாம் நிலையில் 783 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் இயற்பியல் பாடப் பிரிவில் 270 மாணவர்களும்,கணித பாடப்பிரிவில் 252 மாணவர்களும், வேதியியல் பாடப்பிரிவில் 261 மாணவர்கள் பதக்கங்களும் சான்றிதழ்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இந்நிலையில்,கோவை மண்டல ஸ்ரீ சைதன்யா பள்ளிகளுக்கு பெருமை சேர்த்த மாணவ,மாணவிகளுக்கான பாராட்டு விழா சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி அரங்கில் நடைபெற்றது..இதில்,
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும்,மேலும் மாணவ,மாணவிகளுக்கு உறுதுணையாக விளங்கிய பெற்றோர்க ளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், ஸ்ரீசைதன்யா பள்ளிகளின் இயக்குனர் சீமா போபண்ணா,இயக்குனர் நாகேந்தர், பொது மேலாளர் ஹரிபாபு,துணை பொது மேலாளர் நாகேஸ்வரராவ், மண்டல தலைவர் பாலகிருஷ்ணா,தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் துர்கா பிரசாத், பள்ளியின் முதல்வர்கள் கிளாடிஸ் டயானா சிவக்குமார்,ஸவாதி ரெட்டி,அகஸ்டின்,மகாலட்சுமி,அனிதா மாலதிராஜா,மண்டல கல்வி நிலைய தலைவர் பணீந்தரபாபு, துணை முதல்வர் ஸ்ரீமதி ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.