கோவை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்த வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதாகவும், இது இன்னும் பல புதிய வகை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் தகவல்…
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை வணிக மேலாண்மை துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிவள மேம்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது..கல்வி,மருத்துவம்,நிதி,வங்கி, பொழுதுபோக்கு,, சுகாதாரம் என பல்வேறு துறைகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த போவதாக கூறப்படும்,செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில், இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன..
இந்நிலையில் இதனால் மனித வள மேம்பாடு பாதிக்கப்படும் என சிலர் கருத்துக்கள் கூறி வரும் நிலையில், இது குறித்த சரியான புரிதலை ஏற்படுத்தும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மனிவள மேம்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் முனைவர் A.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இதன் துவக்க நிகழ்ச்சியில்,துறை தலைவர் B.சுதாகர் அனைவரையும் வரவேற்று பேசினார்.கருத்தரங்கில் பல்வேறு துறைகளில் சாதித்து உயர் பணிகளில் இருப்பவர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினர்.
புதிய தொழில் நுட்பங்களால் வரும் வாய்ப்புகளை, இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சரியான கல்வி முறை. அதற்கான அடித்தளத்தையும், திறமையையும் மாணவர்கள் கல்லூரியில் பயிலும் போதே வளர்த்துக் கொண்டால், எதிர்காலத்தில் சாதிக்க முடியும் என தெரிவித்தனர்..குறிப்பாக,செயற்கை நுண்ணறிவால், வேலை வாய்ப்புகள் பறிபோகும் என்பதெல்லாம் சரியான வாதம் அல்ல. புதிய தொழில்நுட்பங்கள் வரும் போது அதற்கேற்ப நம்மை மாற்றி கொள்வதே நல்ல நடைமுறையாக இருக்கும்
இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்த வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இது இன்னும் பல புதிய வகை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதே உண்மை என தெரிவித்தனர்.
அனுஷாபிரபா ஒருங்கிணைத்த இந்த கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கிருத்திகா செல்வராஜ்,அரிஃபா, ஆண்டனி பாஸ்கர் ,நர்சத் அரிஃபா ,
ராம் பழனிச்சாமி, மணிவண்ணன், வெங்கடேஷ், வாணிஸ்ரீ, மாணவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.