அவிநாசியில் இருந்து நடுவச்சேரி செல்லும் சாலையில் இராயம்பாளையம் பிரிவு அருக கடந்த ஆறு மாதத்தில் 15க்கும் மேற்பட்ட சிறு விபத்துக்கள் நடைபெற்றுள்ளன மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கவும் உயிரிழப்பு ஏற்படும் முன் உடனடியாக வேகத்தடை அமைத்து நடுவச்சேரியில் இருந்து அவிநாசி நோக்கி வரும் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. நெடுஞ்சாலை துறையிடம் கடந்த ஆறு மாதத்தில் பலமுறை அலைபேசி வாயிலாகவும் நேரில் வாய்மொழி வழியாகவும் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது உடனடியாக அப்பகுதியில் வேகத்தடை வேண்டுமெனவும் வேகத்தடை அமைக்க இயலாவிட்டால் அதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அவிநாசி நகர தலைவர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவிநாசி சட்டமன்ற முழுநேர பொறுப்பாளர் நாராயணன் பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், பிரபு வெங்கடேசன், வக்கீல் பிரபு, ஓபிசி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதி சண்முகம், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் தனபால், கல்வியாளர் பிரிவு சதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.