தூத்துக்குடி திமுக தெற்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் இந்தியா வெல்வது நிச்சயம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் புதியம்புத்தூர் பஜாரில் நடைபெற்றது.
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன், தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணக்குமார், கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, அன்னை இந்திரா நகர் பகுதி செயலாளர் சிவக்குமார், ஸ்பிக் நகர் பகுதி செயலாளர் ஆஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வரவேற்புரையாற்றினார்.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம்,
வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரி சங்கர், மருத்துவர் அணி துணை செயலாளர் வெற்றி வேல், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர் டேவிட் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர் மணி, மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
முடிவில், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ் நன்றியுரையாற்றினார்.